/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிணற்றில் விழுந்த மயில் மற்றும் குஞ்சுகள்: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

ADDED : ஆக 05, 2024 02:03 AM
கரூர், கரூர் அருகே, விவசாய கிணற்றில் தவறி விழுந்த மயில் மற்றும் குஞ்சுகளை தீயணைப்புத்துறை வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
கரூர் மாவட்டம், மாயனுார் காட்டூர் பகுதியில், விவசாய தோட்டங்களில் ஏராளமான மயில்கள் உலா வருகின்றன.
இந்நிலையில், நேற்று காலை மணிகண்டன் என்பவரது, 50 அடி ஆழ கிணற்றில், நான்கு மயில் குஞ்சுகள் விழுந்து விட்டன. அதை பார்த்த தாய் மயிலும், குஞ்சுகளை காப்பாற்ற கிணற்றில் குதித்தது. ஆனால், குஞ்சுகளை மேலே துாக்கி வர முடியாமல், தாய் மயில் தண்ணீரில் நீச்சல் அடித்தபடி தவித்து கொண்டிருந்தது. அப்போது, தாய் மயில் போட்ட சத்தத்தால், அருகில் இருந்தவர்கள், கரூர் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கயிறு மூலம் கிணற்றில் இறங்கி தாய் மயில் மற்றும் குஞ்சுகளை ஒரு மூட்டையில் கட்டி, மேலே உயிருடன் கொண்டு
வந்தனர்.