/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 25, 2024 02:34 AM
கரூர்: க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் க.பரமத்தி உள்ளது. கரூர் நகர பகுதியில் இருந்து, வெள்ளக்கோவில், காங்கேயம், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு, க.பரமத்தி வழியாக பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்கிறது.
அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள், கடந்து செல்ல முடியாமல், க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில் தடுமாறுகின்றனர். அடிக்கடி அப்பகுதியில் விபத்துகளும் நடக்கிறது.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலை க.பரமத்திக்கு, சுற்றுவட்டாரங்களில் உள்ள, 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். விபத்துகளை தவிர்க்க, பல ஆண்டுகளாக க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில், ரவுண்டானா அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், கிராமப்பகுதிகளில் இருந்து செல்லும் பொதுமக்கள், கோவை தேசிய நெடுஞ்சாலையை எளிதாக, கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். விபத்துகளை தடுக்க க.பரமத்தி பஸ் ஸ்டாப்பில், ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தனர்.

