/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழைநீர் தேங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
/
மழைநீர் தேங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மழைநீர் தேங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
மழைநீர் தேங்கியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ADDED : ஆக 18, 2024 03:01 AM
கரூர்: கரூர் அருகே, மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கியதால், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் - திண்டுக்கல் சாலை தான்தோன்றிமலை தெற்கு தெருவில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நி-லையில், திண்டுக்கல் சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், நேற்று அதிகாலை வரை பெய்த மழை காரணமாக, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நிறைவு பெறாததால், தெற்கு தெருவில், குடியிருப்பு பகு-தியில் மழைநீர் தேங்கியது.
அதை கண்டித்து, தான்தோன்றிமலை தெற்கு தெருவை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை, திண்டுக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சி உதவி பொறியாளர் மஞ்சு நாத், நெடுஞ்சாலை துறை உதவி பொறி-யாளர் கர்ணன் மற்றும் தான்தோன்றிமலை போலீசார், மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, தான்தோன்றிமலை தெற்கு தெருவில் மழைநீர் தேங்காத வகையில், தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்-தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்-றனர். இதனால், கரூர்-திண்டுக்கல் சாலையில், அரைமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.