/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கள்ளச்சாராய வியாபாரிகள் மிரட்டுவதாக புகார் மனு
/
கள்ளச்சாராய வியாபாரிகள் மிரட்டுவதாக புகார் மனு
ADDED : மே 21, 2024 11:10 AM
கரூர்: கரூர் அருகே, கள்ளச்சாராயம் விற்பனை கும்பல் மிரட்டுவதாக, குடும்பத்துடன் ஒருவர் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் பழையூர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், நேற்று குடும்பத்துடன், எஸ்.பி., அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:நெரூர் வடபாகம் பழையூர் பகுதியில், சிலர் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபடுகின்றனர். இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் கொடுப்பதாக கூறி, கள்ளச்சாராய விற்பனை கும்பல் எனது வீட்டுக்கு வந்து மிரட்டுகின்றனர்.
எனது வீட்டில் உள்ள 'சிசிடிவி' கேமரா, கள்ளச்சாராய விற்பனைக்கு தடையாக உள்ளதாக அந்த கும்பல் நினைக்கிறது. இதனால், எனது குடும்பத்தினர் மீது கொலை வெறித்தாக்குதல் நடக்கும் என்ற அச்சம் உள்ளது. நெரூர் வடபாகம் பழையூர் பகுதியில், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது கடும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

