/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் கேட்டு கரூர் கலெக்டரிடம் மனு
/
புலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் கேட்டு கரூர் கலெக்டரிடம் மனு
புலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் கேட்டு கரூர் கலெக்டரிடம் மனு
புலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் கேட்டு கரூர் கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 02, 2024 01:33 AM
கரூர், புலியூர் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில், கரூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது:
புலியூர் டவுன் பஞ்., உள்பட கரூர் திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஏற்கனவே இருந்த இடத்தில் நிழற்கூடம் அமைக்க வேண்டும். நிழற்கூடம் இருந்த போது பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலை செல்பவர்கள் ஆகியோருக்கு வசதியாக இருந்தது. ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால், பஸ் ஸ்டாப் மாற்ற திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இது குறித்து மனு கொடுத்து முறையான பதில் இல்லை. அங்கேயே நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.