/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி சிறுமிக்கு திருமணம் மூவர் மீது போக்சோ வழக்கு
/
பள்ளி சிறுமிக்கு திருமணம் மூவர் மீது போக்சோ வழக்கு
பள்ளி சிறுமிக்கு திருமணம் மூவர் மீது போக்சோ வழக்கு
பள்ளி சிறுமிக்கு திருமணம் மூவர் மீது போக்சோ வழக்கு
ADDED : ஆக 22, 2024 01:38 AM
பள்ளி சிறுமிக்கு திருமணம்
மூவர் மீது போக்சோ வழக்கு
கரூர், ஆக. 22-
கரூர் அருகே, பள்ளி சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த மூன்று பேர் மீது, மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் இனுங்கூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன் ராம் பிரசாத், 24. இவருக்கும், கரூர் குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த. 16 வயது எஸ்.எஸ்.எல்.சி., படித்து வரும் பள்ளி சிறுமிக்கும் கடந்த, 20ல் திருமணம் நடந்துள்ளது. அதில், விருப்பம் இல்லாத சிறுமியின் தாய், கரூர் மகளிர் போலீசில் புகார்
செய்தார்.
இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்து கொண்ட ராம் பிரசாத், அவரது தாய் செல்வி மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய மூவர் மீது, கரூர் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.