/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட மூன்று பேர் மீது போக்சோ
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட மூன்று பேர் மீது போக்சோ
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட மூன்று பேர் மீது போக்சோ
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட மூன்று பேர் மீது போக்சோ
ADDED : பிப் 24, 2025 03:21 AM
கரூர்: கரூர் அருகே, பள்ளி சிறுமியை திருமணம் செய்து கொண்ட வாலிபர் உள்பட, மூன்று பேர் மீது மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்குடி பகுதியை சேர்ந்த ராமசாமி என்-பவரது மகன் மணிகண்டன், 23; இவர் கடந்தாண்டு ஜூலை, 5ல் கரூர் வடக்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த, 17 வயது எஸ்.எஸ்.எல்.சி., படித்து வந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சிறுமி தற்போது, மூன்று மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து, தான்தோன்றிமலை பஞ்., யூனியன் சமூக நல அலு-வலர் பூங்கொடி, 55, கரூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, சிறுமியை திருமணம் செய்து கொண்ட மணி-கண்டன், சிறுமியின் பெற்றோர் என மூன்று பேர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மகளிர் போலீசார் விசாரிக்-கின்றனர்.