sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

/

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை


ADDED : ஆக 18, 2024 03:18 AM

Google News

ADDED : ஆக 18, 2024 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த, ஆவணி மாத சனி பிரதோஷ பூஜையில் நேற்று ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கரூர் நகரில், பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள, நந்தி சிலைக்கு, ஆவணி மாத சனி பிரதோ-ஷத்தை யொட்டி, நேற்று மாலை, 5:00 மணி முதல் பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்-தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிப்பட்டனர். மஹா தீபாரதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்-பட்டது.

* நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத சனி பிரதோஷத்தை யொட்டி, நேற்று, மாலை நந்தி சிலைக்கு, வாசனை திரவியங்கள் மூலம் அபிேஷகம் நடந்தது. பிறகு, மூலவர் மேகபாலீஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்க-ளுக்கு காட்சியளித்தார்.

அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னை-வன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்த மேடு ஈஸ்வரன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

* கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழைய ஜெயங்கொண்டத்தில் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. நேற்று சனி பிரதோ-ஷத்தையொட்டி, இக்கோவிலில் உள்ள நந்திக்கு பால், தயிர், இளநீர், பழரசம், சந்தனம், மஞ்சள், திரவிய பொடிகளால் அபி-ஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்யப்-பட்டு, நந்திக்கு தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, ஆள-வந்தீஸ்வரர் சிவன், ஆரணவல்லி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us