/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தா.மலை வெங்கடரமண சுவாமி கோவில் புரட்டாசி விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

ADDED : செப் 17, 2024 01:17 AM
தா.மலை வெங்கடரமண சுவாமி கோவில்
புரட்டாசி விழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம்
கரூர், செப். 17-
தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழாவுக்காக பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு வரும், அக்., 4 ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடக்கிறது. வரும் அக்., 10 ல் மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 12 ல் காலை, 9:15 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. வரும் செப்., 21 ல் முதலாவது சனி கிழமை வழிபாடு தொடங்குகிறது. அதையொட்டி, கோவில் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி, பக்தர்கள் வரிசையாக கோவிலுக்கு செல்லும் வகையில், மூங்கில் தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.