/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்சாரம் தாக்கியதில் தலைமையாசிரியர் பலி
/
மின்சாரம் தாக்கியதில் தலைமையாசிரியர் பலி
ADDED : ஆக 17, 2024 05:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வெள்ளியணை அருகே, பால் கறக்கும் இயந்திரத்தை சார்ஜர் போடும் போது, மின்சாரம் தாக்கியதில், அரசு பள்ளி தலைமை-யாசிரியர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை சின்னான்டிபட்டியை சேர்ந்தவர் எட்வர்ட் பீட்டர் துரைராஜ், 56; நல்லுாரன்பட்டி அரசு தொடக்கப்-பள்ளி தலைமையாசிரியர். இவர் நேற்று முன்தினம் வீட்டில், பால் கறக்கும் இயந்திரத்துக்கு, சார்ஜர் போட்டுள்ளார். அப்-போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், எட்வர் பீட்டர் துரைராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து, மனைவி சகாய நிர்-மலா, 55; கொடுத்த புகார்படி, வெள்ளியணை போலீசார் வழக்-குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

