/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி அருகில் வேகத்தடை பொது மக்கள் கோரிக்கை
/
பள்ளி அருகில் வேகத்தடை பொது மக்கள் கோரிக்கை
ADDED : ஆக 06, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, ஆகுளித்தலை அடுத்த, சூரியனுார் பஞ்.,
நங்கவரம் திருச்சி செல்லும் ராணிமங்கம்மாள் நெடுஞ்சாலையில், மேலப்பட்டி பஸ் ஸ்டாப், சமுதாய கூடம் மற்றும் அரசு நடுநிலைப்பள்ளி செல்லும் பிரிவு சாலையில், அரசு மற்றும் தனியார் பஸ்கள், கார், கனகர வாகனங்கள் சென்று வருகிறது. இந்த பிரிவு சாலையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள், கார்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன.
பள்ளி மாணவர்கள், பொது மக்கள் நலன் கருதியும், விபத்தை தடுக்கும் வகையில் ராணி மங்கம்மாள் நெடுஞ்சாலையில், பள்ளி பிரிவு சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள், குளித்தலை உதவி கோட்ட பொறியாளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.