/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மரங்களை பாதுகாக்க பொது மக்கள் கோரிக்கை
/
மரங்களை பாதுகாக்க பொது மக்கள் கோரிக்கை
ADDED : மே 25, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., மருதுார், மேட்டு மருதுார் சாலை, ஆதிநத்தம் நடுப்பட்டி, கணேசபுரம் குப்புரெட்டிபட்டி, பணிக்கம்பட்டி, நடுப்பட்டி சாலையோரங்களில் பூவரசு,
ஆலமரம், வேப்பமரம், பனை, புங்கன் மரங்கள் தானாக வளர்ந்துள்ளன.
இந்த மரங்களை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டவுன் பஞ்., துாய்மை பணியாளர்கள் கிளைகளை அகற்றி பாதுகாத்து வருகின்றனர். டவுன் பஞ்., நிர்வாகம், மரங்களுக்கு பதிவு எண் போடாததால், பொது மக்கள் வெட்டி சேதம் செய்தும், சிலர் மரங்களை வெட்டி விற்பனை செய்தும் வருகின்றனர்.
சாலையோரங்களில் உள்ள மரங்களை, பாதுகாக்க வேண்டும் என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

