/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
-'அரசியலை விட்டு விலக தயார்': மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்
/
-'அரசியலை விட்டு விலக தயார்': மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்
-'அரசியலை விட்டு விலக தயார்': மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்
-'அரசியலை விட்டு விலக தயார்': மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்
ADDED : ஜன 28, 2025 07:09 AM
கரூர்: '' கரூரில், குப்பையில் கிடந்த மனுக்கள் ஒரிஜினல்தான், போலி என நிரூபித்தால், அரசியலை விட்டு விலக தயார்,'' என, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், மாணவர் அணி செயலாளர் சரவணன் தலைமையில், நேற்று இரவு லைட் ஹவுஸ் கார்னரில் நடந்தது. இதில், கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் பேசியதாவது:
கடந்த, 2021ல், தி.மு.க.,வினர் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள், கோதுாரில் குப்பையில் வீசப்பட்டது. அந்த மனுக்கள் என்னிடம் உடனடியாக வந்து விட்டது. அது ஒரிஜினல்தான். போலி என நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயார்.
அதேபோல், உண்மைதான் என்றால், அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியலை விட்டு விலக தயாரா கடந்த, 2016ல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத போது, அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் சீட் தர எதிர்ப்பு இருந்தது. அதையெல்லாம் சரி செய்து, செந்தில் பாலாஜிக்கு சீட் வாங்கி கொடுத்து, தேர்தல் பொறுப்பாளராக இருந்து வெற்றி பெற வைத்தவர், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிதான். 2016ல், பல துரோகங்களுக்கு மத்தியில் நான், 441 ஓட்டு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றேன். மறுக்கவில்லை. ஆனால் அந்த வெற்றி, 44 ஆயிரம் ஓட்டுகளுக்கு சமம்.
வரும், 2026 தேர்தல் களம் தயாராக உள்ளது. அதில், நான் மோதி பார்க்க தயார். நீ தயாராக இரு. கரூர் மட்டுமின்றி மற்ற மூன்று தொகுதிகளிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும். எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, இரண்டாவது முறையாக முதல்வராக வருவார். இதை, தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர். இவ்வாறு பேசினார். மாநில அமைப்பு செயலாளர் சின்னசாமி, மாவட்ட நிர்வாகிகள் திருவிகா, நெடுஞ்செழியன், தானேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.