/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சென்னைக்கு அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு கரூரில் ஆம்னி பஸ்களின் ஆதிக்கம் அதிகரிப்பு
/
சென்னைக்கு அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு கரூரில் ஆம்னி பஸ்களின் ஆதிக்கம் அதிகரிப்பு
சென்னைக்கு அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு கரூரில் ஆம்னி பஸ்களின் ஆதிக்கம் அதிகரிப்பு
சென்னைக்கு அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு கரூரில் ஆம்னி பஸ்களின் ஆதிக்கம் அதிகரிப்பு
ADDED : ஆக 26, 2024 02:29 AM
கரூர : கரூரில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்கள் எண்ணிக்கை குறைக்-கப்பட்டதால், ஆம்னி பஸ்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் ஜவுளி, கொசுவலை, பஸ் பாடி ஆகிய தொழில்-களில், கரூர் முக்கிய இடம் பிடித்து உள்ளது. வேலை நிமித்த-மாக தலைநகரான சென்னைக்கு பலர் சென்று வருகின்றனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில், இரண்டு பஸ்கள் மட்டுமே சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு, ஆம்னி பஸ்கள் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறிய-தாவது: கரூரிலிருந்து சென்னைக்கு அரசு விரைவு கழக பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளப்பட்டியிலிருந்து வரும் பஸ், கரூரிலிருந்து, இரவு, 8:00 மணிக்கு புறப்படும் பஸ், இரவு, 9:00 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது. சனி, ஞாயிற்று மட்டும், இரவு, 9:30 மணிக்கு கூடுதலாக ஒரு பஸ் செல்கிறது. அல்ட்ரா டீலக்ஸ் பஸ்க்கு, 363 ரூபாய் கட்டணம், டீலக்ஸ் பஸ்க்கு, 313 ரூபாய் கட்டணம் என்ற குறைந்த கட்டணம் என்-பதால், ஒரு வாரத்திற்கு முன்பே டிக்கெட் முன்பதிவாகி விடுகி-றது.
இதனால், பயணிகள் ஆம்னி பஸ்களை நாடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கடந்த ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்ச-ராக விஜயபாஸ்கர் இருந்த போது, ஒரு, 'ஏசி' பஸ் உள்பட, 4க்கும் மேற்பட்ட பஸ்கள், சென்னைக்கு இயக்கப்பட்டு வந்தன. ஆட்சி மாற்றம் வந்த பின், 'ஏசி' பஸ் நிறுத்தப்பட்டு, இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, கரூரில் தனியார் ஆம்னி பஸ்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில், 27க்கும் மேற்-பட்ட ஆம்னி பஸ்கள் கரூர் பஸ் ஸ்டாண்ட் அருகே அதிகளவில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. விடுமுறை தினங்-களில், 35 முதல், 40 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், சாதாரண நாட்களில், 500 முதல், 900 ரூபாய் வரையும், விடுமுறை தினங்களில், 700 முதல், 1,500 ரூபாய் வரை டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில், ஒரு டிக்கெட், 3,000 ரூபாய் வரை விதிமுறை மீறி விற்பனை செய்யப்-படுகிறது. கூடுதல் விலை கொடுத்து டிக்கெட் வாங்க முடியாத பயணிகள், திருச்சி சென்று பஸ் பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்-ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.