/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதர்மண்டிய வாய்க்கால் சுத்தம் செய்ய கோரிக்கை
/
புதர்மண்டிய வாய்க்கால் சுத்தம் செய்ய கோரிக்கை
ADDED : செப் 16, 2024 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மக்கள் பாதையின் வழியாக இரட்டை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பகுதியை சுற்றிலும் அதிகளவு குடியிருப்புகள் உள்ளன.
வாய்க்கால் சரியாக பராமரிக்கப்படாததால், செடி, கொடிகள் வளர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மேலும், விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. எனவே, அதிகாரிகள் இந்த வாய்க்காலை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.