/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையின் நடுவே மின் கம்பங்கள் மாற்றி அமைக்க வேண்டுகோள்
/
சாலையின் நடுவே மின் கம்பங்கள் மாற்றி அமைக்க வேண்டுகோள்
சாலையின் நடுவே மின் கம்பங்கள் மாற்றி அமைக்க வேண்டுகோள்
சாலையின் நடுவே மின் கம்பங்கள் மாற்றி அமைக்க வேண்டுகோள்
ADDED : மே 04, 2024 07:09 AM
கரூர் : கரூர் அருகே சாலையின் நடுவே மின் கம்பங்கள் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், மின் கம்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் அருகே தான்தோன்றிமலை தின்னப்பா நகரில், 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்க பணிகள் நடந்துள்ளன. அப்போது, சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை, வேறு இடத்துக்கு மாற்றாமல் விட்டு விட்டனர். இந்நிலையில், மின் கம்பம் உள்ள சாலையில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் அதிகளவில் செல்கின்றன. மேலும், இருசக்கர வாகனங்களில், பொதுமக்கள் சென்று வருவதால், இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். இதனால், தின்னப்பா நகரில் சாலையின் நடுவே உள்ள, மின் கம்பங்களை, சாலையின் ஒரத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் வேண்டு
கோள் விடுத்துள்ளனர்.