/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விதிமுறையை பின்பற்றாத லாரிகள்சிதறும் ஜல்லிகளால் விபத்து அபாயம்
/
விதிமுறையை பின்பற்றாத லாரிகள்சிதறும் ஜல்லிகளால் விபத்து அபாயம்
விதிமுறையை பின்பற்றாத லாரிகள்சிதறும் ஜல்லிகளால் விபத்து அபாயம்
விதிமுறையை பின்பற்றாத லாரிகள்சிதறும் ஜல்லிகளால் விபத்து அபாயம்
ADDED : மே 01, 2024 02:11 AM
அரவக்குறிச்சி;அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கட்டட பணிகளுக்கு தேவையான மணல், ஜல்லிக்கற்கள் ஆகியவை, அருகே உள்ள கிரஷரில் இருந்து லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது. அவ்வாறு மணல், ஜல்லிகளை எடுத்துச் செல்லும் லாரிகள், தார்ப்பாய் போட்டு மூடி செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் அந்த விதிமுறையை காற்றில் பறக்க விடுவதால், லாரியில் இருந்து மணல், ஜல்லிக்கற்கள் சிதறி சாலையில் விழுகின்றன. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், ஜல்லிக்கற்கள் மீது ஏறி தடுமாறி விழுகின்றனர். சில நேரங்களில் உயிர் பலியும் ஏற்படுகிறது. லாரியில் மணல், ஜல்லி, செங்கற்கள் எடுத்து செல்லும்போது தார்ப்பாய் போட்டு மூடி செல்ல வேண்டும் என்பதை, லாரி டிரைவர்கள் துளியும் மதிப்பதில்லை. இதன் காரணமாக அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, மணல், ஜல்லி, செங்கற்கள் ஏற்றிச்செல்லும் டிராக்டர், லாரிகள், தார்ப்பாய் போட்டு மூடி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.