/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் விழுந்த பள்ளம்: 30 நாளுக்கு பின் சீரமைப்பு
/
சாலையில் விழுந்த பள்ளம்: 30 நாளுக்கு பின் சீரமைப்பு
சாலையில் விழுந்த பள்ளம்: 30 நாளுக்கு பின் சீரமைப்பு
சாலையில் விழுந்த பள்ளம்: 30 நாளுக்கு பின் சீரமைப்பு
ADDED : ஜூலை 07, 2024 02:49 AM
கரூர்:கரூர் அருகே சாலையில் விழுந்த பள்ளம், ஒரு மாதத்துக்கு பிறகு சீரமைக்கப்பட்டது.
கரூர் மாநகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பல இடங்களில் பாதாள சாக்கடை சிமென்ட் மூடிகள் சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம், 7 ல் கரூர்-வாங்கல் சாலை பழைய நீதிமன்றம் அருகே, பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, மீண்டும் பள்ளம் விழுந்தது. இதனால், கரூர் நகரில் இருந்து வாங்கல், நெரூர், நாமக்கல் மாவட்டம் மோகனுார், பசுபதிபாளையம், தொழிற் பேட்டை பகுதிகளுக்கு செல்லும் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
இதையடுத்து, பாதாள சாக்கடை குழாய் மாற்றுவது உள்ளிட்ட, மாநகராட்சி சார்பில் பணிகள் தொடங்கியது.
ஆனால், சீரமைப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடந்தது. இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதனால், பாதாள சாக்கடை குழாயில் சீரமைப்பு பணிகள் விரைவாக நடந்தது. தற்போது, பள்ளம் மூடப்பட்டு, மீண்டும் பழைய நீதிமன்றம் வழியாக, வாகன போக்குவரத்து தொடங்கியுள்ளது.