/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் ஆபத்தான தொட்டி ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
/
சாலையோரம் ஆபத்தான தொட்டி ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
சாலையோரம் ஆபத்தான தொட்டி ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
சாலையோரம் ஆபத்தான தொட்டி ஓட்டுனர்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
ADDED : ஆக 07, 2024 01:48 AM
கரூர் நொய்யல்-வைரமடை சாலையோரம், ஆபத்தான தொட்டி இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கரூர் அருகே நொய்யலில் இருந்து, வைரமடைக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. தினமும், 100க்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இப்பகுதியில் கல் குவாரிகள் அதிகம் என்பதால், ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. சாலையோரம் காவிரி கூட்டு திட்ட குழாய்கள் செல்கிறது. அதில் சேர்வைக்காரன் பாளையம் சாலையோரம் தொட்டி கட்டப்பட்டு, கேட் வால்வு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கேட் வால்வு உள்ள தொட்டிகள் மூடப்படாமல் உள்ளது. அந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் தொட்டி இருப்பது தெரியாமல் விழுந்து படுகாயம் அடைகின்றனர். சாலையில் எதிரே வரும் வாகனங்கள் வழிவிட்டு செல்லும் போது, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கனகர வாகனங்கள் செல்லும் சாலை என்பதால், இரண்டு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக தொட்டி காணப்படுகிறது. எனவே, சாலையோரம் உள்ள கேட் வால்வு தொட்டிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.