/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையோரம் குப்பை எரிப்பு: வாகன ஓட்டிகள் தவிப்பு
/
சாலையோரம் குப்பை எரிப்பு: வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : மார் 02, 2025 06:57 AM
கரூர்: சாலையோரம் குப்பை எரிப்பதால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.கரூர், ஈரோடு சாலையில் ஆத்துாரில் குப்பை கொட்ட போது-மான தொட்டிகள் வைக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் சாலையோரத்தில் குப்பை கொட்டி வருகின்றனர். அதில் சிலர் தீ வைத்து விடுகின்றனர்
. இதனால், வெண்ணைமலை சாலை எப்-போதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். மேலும், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் பிரச்னை-களை சந்திக்கின்றனர். பல ஆண்டுகளாக, சாலையோரம் குப்பை குவியல் குறைந்தபாடில்லை. குப்பையை அகற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.