/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பேவர் பிளாக் கல்லால் வலுவிழக்கும் சாலையோர மரங்கள்
/
பேவர் பிளாக் கல்லால் வலுவிழக்கும் சாலையோர மரங்கள்
ADDED : செப் 05, 2024 02:40 AM
கரூர்: சாலையோரம் உள்ள மரங்களை, பட்டுப்போக செய்யும் வகையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில், 4 சதவீதம் மரங்கள் மட்டுமே உள்ளது. மழை பொழிவு குறைவாக உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், சாலை விரிவாக்கம் என்ற பெயரில் நுாற்றாண்டுகளை கடந்த மரங்கள் வெட்டப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கரூர்--திண்டுக்கல் சாலை விரிவாக்கம் செய்யும் போது, கரூர் சுங்க-கேட்டில் இருந்து வெங்ககல்பட்டி வரை இருந்த, 40க்கும் மேற்-பட்ட பழமையான மரங்கள் வெட்டப்பட்டது. மீண்டும், நெடுஞ்-சாலைத்துறை சார்பில், 4 கோடி ரூபாய் சுங்ககேட் முதல் வெங்-ககல்பட்டி பகுதி வரை வடிகால் கட்டி, பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது.சாலையின் இரு புறமும் இருக்கும் பழைய அரசு, புளி, வேம்பு மரங்களை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கட்டாய-மாக அகற்ற வேண்டிய மரங்களை அகற்றிவிட்டு, மீதி மரங்கள் அகற்றப்படாமல் பணிகள் நடக்கிறது. தற்போது, மரங்களை சுற்றி உள்ள பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏற்றார் போல், பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. அதில், மரங்களுக்கு வேர் பகுதி தெரியாத அளவில் கற்கள் பதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:
வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வரு-கின்றனர். தற்போது, சுங்ககேட்டில் இருந்து தான்தோன்றிமலை சாலையோரம் வரை, பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகி-றது. அதில் மரத்தின் வேரை சுற்றி, இரண்டு அடி இடைவெளி விட்டு கற்களை பதிக்க வேண்டும். இங்கு, மரத்தின் மண்தரை தெரியாத அளவில் மிகமிக குறைந்த இடைவெளி விட்டு மரத்தை சுற்றி கற்கள் பதிக்கப்பட்டு இருக்கிறது. வேர் பகுதிக்கு, தண்ணீர் செல்லும் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு, மரங்கள் வலு-விழந்து காணப்படுகின்றன. சில மரங்கள் பட்டுப்போய் விடும் அபாயம் உள்ளது. ஒரு மரத்தை வெட்டினால், அதே இடத்தில் மற்றொரு மரம் நட வேண்டும் என, தமிழக அரசு கூறுகிறது. அதனை மட்டும் அரசு துறையினர் பின்பற்றுவதில்லை.
இவ்வாறு கூறினர்.
இது குறித்து, தமிழக நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) மாவட்ட கோட்ட பொறியாளர் ரவிக்குமார் கூறு-கையில், ''மரத்தின் மண்தரை பகுதியே, வெளியே தெரியாத வகையில் மரத்தை சுற்றி கற்கள் பதிக்கப்பட்டு இருப்பதை, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.