/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்
/
சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க கூட்டம்
ADDED : ஆக 25, 2024 01:14 AM
சத்துணவு, அங்கன்வாடி
ஓய்வூதியர் சங்க கூட்டம்
கரூர், ஆக. 25-
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம், கரூர் மாவட்ட பேரவை கூட்டம் தலைவர் மாரிமுத்து தலைமையில், தாசில்தார் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
அதில், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்சன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும். இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். மாத இறுதி நாளில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், அகவிலைப்படி, மருத்துவபடி, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநில துணைத்தலைவர் தனபாக்கியம், பொருளாளர் ஆனந்த வள்ளி, மாவட்ட இணைச்செயலாளர்கள் சரஸ்வதி, சுப்புலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.