/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது
/
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: டிரைவர் கைது
ADDED : மே 01, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:குளித்தலை அடுத்த பாலவிடுதி எஸ்.ஐ., மனோகரன் மற்றும் போலீசார் தரகம்பட்டி நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த டாரஸ் டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், சட்டத்துக்கு விரோதமாக செம்மண் வெட்டி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து, திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த சிட்லரை சேர்ந்த டிரைவர் குமார், 40, மீது
வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.