/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே கேட்டில் உடைந்த நிலையில் சிலாப் கற்கள்
/
ரயில்வே கேட்டில் உடைந்த நிலையில் சிலாப் கற்கள்
ADDED : ஆக 06, 2024 01:48 AM
கரூர், புகழூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள, சிலாப் கற்கள் உடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
வேலாயுதம்பாளையம், புன்னம் சத்திரம் சாலையில், புகழூர் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. அந்த பகுதியில் ரயில்வே கேட் வழியாக, ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த, பல்வேறு பகுதிகளுக்கு, பொதுமக்கள் வாகனங்களில் செல்கின்றனர்.
குறிப்பாக, மூன்று மாவட்டங்களை இணைக்கும், புகழூர் ரயில்வே கேட் வழியாக, டூவீலர்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு பணிகள் காரணமாக சென்று வருகின்றனர். இந்நிலையில், புகழூர் ரயில்வே கேட் பகுதியில், தண்டவாளங்களுக்கு இடையில், வாகனங்கள் செல்லும் வகையில், சிலாப் கற்கள் போடப்பட்டுள்ளது. அந்த சிலாப் கற்களில், பெரும்பாலானவை உடைந்த நிலையில் உள்ளது. இதனால், டூவீலர்களில் செல்வோர் தடுமாறுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, புகழூர் ரயில்வே கேட் பகுதியில், உடைந்துள்ள சிலாப் கற்களை மாற்ற, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.