/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன்கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
/
செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன்கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன்கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன்கோவிலில் சிறப்பு வழிபாடு பூஜை
ADDED : ஜூலை 20, 2024 02:23 AM
கிருஷ்ணராயபுரம்;கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை, பழைய நெடுஞ்சாலை அருகில் செம்பொற்ஜோதீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது.இங்கு நேற்று மாலை, பிரதோஷம் வழிபாட்டை முன்னிட்டு நந்திக்கு பால், தயிர், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம், திரவியப்பொடி ஆகிய பொருட்கள் கொண்டு அபி ேஷகம் நடந்தது.நந்திக்கு மலர் மாலை, அருகம்புல் மாலை கொண்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் சிவன், அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. திரளானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.* கருப்பத்துார் சிவன் கோவிலில் உள்ள, சிம்மபுரிஸ்வரர் சிவன் மற்றும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. முன்னதாக நந்திக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், வாசனை திரவியப்பொடிகள் கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது.