/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆவணி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
/
ஆவணி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ஆவணி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ஆவணி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு
ADDED : செப் 03, 2024 03:39 AM
நாமக்கல்: ஆவணி அமாவாசையையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி, தமிழ் மாத முதல் ஞாயிறு, தமிழ், தெலுங்கு, ஆங்கில வருட பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, ஏகாதசி உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.அதன்படி, ஆவணி அமாவாசையான நேற்று, நாமக்கல் ஆஞ்சநே-யருக்கு அபிஷேகம், காலை, 9:00 மணிக்கு வடைமாலை, வெற்-றிலை மாலையும், 11:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
அதேபோல், உற்சவ மூர்த்திக்கும், வெள்ளியில் செய்த வெற்-றிலை மாலை சாத்துப்படி செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.