/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே குகைவழி பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை: எம்.பி.,
/
ரயில்வே குகைவழி பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை: எம்.பி.,
ரயில்வே குகைவழி பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை: எம்.பி.,
ரயில்வே குகைவழி பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை: எம்.பி.,
ADDED : செப் 01, 2024 04:19 AM
கரூர்: ''கரூர் எம்.பி., தொகுதியில், ரயில்வே குகை வழிப்பாதை-களில், மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க, ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது,'' என, காங்., எம்.பி., ஜோதிமணி தெரிவித்தார்.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், வந்தே பாரத் ரயிலை வரவேற்ற எம்.பி., ஜோதிமணி, நிருபர்களிடம் கூறியதாவது:மதுரை - பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை, கரூரில் நிறுத்தும்படி மத்திய ரயில்வே அமைச்சர், ரயில்வே சேர்மன் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது, வந்தே பாரத் ரயில் கரூரில் நின்று செல்கிறது. கரூரில் பல முக்கிய ரயில்களை நிறுத்தவும், கரூர் எம்.பி., தொகுதியில் உள்ள, ரயில்வே குகை வழிப்பாதைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு, ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ரயில்வே துறை சார்பில், அதிக நிதி ஒதுக்க வேண்டும்.
கரூர் ரயில்வே ஸ்டேஷனில், அம்ருத் பாரத் திட்ட தொடக்க விழாவில், கல்வெட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பெயர் இல்லை. பணிகள் நிறைவு பெற்ற பிறகு, அவரது பெயரை, கல்வெட்டில் இடம் பெற செய்ய வேண்டும் என, ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் எம்.பி., தொகுதியில், சட்டசபை தொகுதி வாரியாக, நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. விரைவில் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடத்-தப்படும். இவ்வாறு கூறினார்.