/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நவோதயா பள்ளிகள் தொடங்க நடவடிக்கை :பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி
/
நவோதயா பள்ளிகள் தொடங்க நடவடிக்கை :பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி
நவோதயா பள்ளிகள் தொடங்க நடவடிக்கை :பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி
நவோதயா பள்ளிகள் தொடங்க நடவடிக்கை :பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குறுதி
ADDED : ஏப் 10, 2024 02:12 AM
கரூர்;கிராமப்புறங்களில் தரமான கல்வி அளிக்க, நவோதயா பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன் தெரிவித்தார்.
கரூர் லோக்சபா தொகுதியில் கிருஷ்ணராயபுரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காளையாபட்டி, வீரியபட்டி, விராலிப்பட்டி, வீரணம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளில், பா.ஜ., வேட்பாளர் செந்தில்நாதன், திறந்த ஜீப்பில் பிரசாரத்தை மேற்கொண்டார்.
அப்போது, அவர் பேசியதாவது: கரூர் எம்.பி.,ஜோதிமணி, வெற்றி பெற்று ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் ஓட்டு கேட்க மட்டும் வருகிறார். தொகுதி மக்கள் பிரச்னைகளை பற்றி சிந்திக்காமல் எம்.பி., இருந்துள்ளார். மக்களையே சந்திக்காத இவர்கள், எப்படி மக்கள் பணியாற்ற முடியும். தி.மு.க., - அ.தி.மு.க., மாறி மாறி ஆட்சியில் இருந்தபோதும் மக்களுடைய தேவைகளை புரிந்து எதுவும் செய்து கொடுக்கவில்லை. தி.மு.க., ஆட்சியில் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கஞ்சாவிற்கும், போதை பொருட்களுக்கும் அடிமையாகி விட்டனர். குடிநீர் பிரச்னை, சாலை உள்பட எந்த அடிப்படை வசதிகளையும், தி.மு.க., அரசு செய்வது கிடையாது.
இது, பிரதமர் யார் என்று தேர்வு செய்யும் தேர்தல். 400 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைக்கும். இந்த தொகுதியில், பா.ஜ.,வுக்கு வாக்களித்தால் நேரடியாக மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்ற முடியும். இந்த பகுதியில், நவோதயா பள்ளிகள் கொண்டு வந்து, தனியார் பள்ளிக்கு இணையாக கல்வி வழங்கப்படும். தேர்தலில் கடைசி நேரத்தில் மக்களுக்கு பொருட்களையோ, பணத்தையோ கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என எண்ணுகின்றனர்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அப்போது, மாவட்ட செயலாளர் விக்டோரியா வேலுச்சாமி, மகளிர் அணி மாநில துணைத்தலைவர் மீனா வினோத்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ரகுபதி, ஒன்றிய தலைவர் ராமர் உள்பட பலர் பங்கேற்றனர்.

