/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்
/
பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கல்
ADDED : ஆக 30, 2024 01:49 AM
குளித்தலை, ஆக. 30-
குளித்தலை அடுத்த, தோகைமலை சினேகிதி அறக்கட்டளை அலுவலகத்தில் சி.ெஹச்.எம். திட்டத்தின் கீழ் நேற்று, 50 பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி துவக்க விழா நடந்தது. அறக்கட்டளை இயக்குனர் மதி தலைமை வைத்தார். திட்ட இயக்குனர் சத்தியபாமா, ஒருங்கிணைப்பாளர் வடிவேல், முதன்மை பயிற்றுனர் மகாலட்சுமி ஆகியோர் திட்ட விளக்க உரை ஆற்றினர்.
தோகைமலை யூனியன் குழு தலைவர் சுகந்தி சசிகுமார், இலவச தையல் பயிற்சி துவக்கி வைத்து பேசினார். தோகைமலை யூனியன் கமிஷனர் ராஜேந்திரன். விவசாயிகள் மறுவாழ்வு அறக்கட்டளை இயக்குனர் நாகராஜ் ஆகியோர், பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசினர்.
தோகைமலை கிளை நுாலகர் கண்ணதாசன். நெய்தலுார் உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். 30 பெண்களுக்கு யூனியன் குழு தலைவர் சுகந்திசசிகுமார் இலவச தையல் இயந்திரம் வழங்கினார். தையல் பயிற்சி ஆசிரியை பானுப்பிரியா நன்றி கூறினார்.