/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்டெக்ஸ் தொட்டி பராமரிப்பு இன்றி வீண்
/
சின்டெக்ஸ் தொட்டி பராமரிப்பு இன்றி வீண்
ADDED : ஏப் 24, 2024 02:26 AM
கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் சின்டெக்ஸ் தொட்டி பராமரிப்பு இன்றி வீணாகி வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பஞ்சப்பட்டி கடைவீதி அருகில் பஸ் ஸ்டாப் உள்ளது. கரூர், குளித்தலை, தரகம்பட்டி, கடவூர், கொசூர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பஞ்சப்பட்டி பஸ் ஸ்டாப்பிற்கு வருகின்றனர். பஞ்சாயத்து சார்பில் பஸ் ஸ்டாப் அருகில், குடிநீர் குடிப்பதற்காக சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொட்டியில் தண்ணீர் ஏற்றி மக்கள் குடிநீர் பயன்படுத்தி வந்த நிலையில். சில மாதங்களாக சின்டெக்ஸ் தொட்டி பராமரிப்பு இன்றி தொட்டியில் நீர் ஏற்றாமல் இருந்து வருகிறது. வெயில் காலங்களில் பஸ் ஏற வரும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
பஞ்சாயத்து நிர்வாகம், தொட்டியில் காவிரி குடிநீர் ஏற்றி மக்களுக்கு உதவிட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

