/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முன்வர வேண்டும்
/
பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற முன்வர வேண்டும்
ADDED : ஆக 15, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்.
கரூர், ராயனுார் வழியாக செல்லாண்டிபாளையம் பகுதியில் இருந்து மில்கேட் வரை பாசன வாய்க்கால் செல்கிறது. செல்லாண்டிபாளையம் பகுதியில் உள்ள பாசன வாய்க்காலில், அதிகளவில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் தேங்கி நிற்கிறது. இதில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள், பேப்பர் கப் உள்ளிட்ட அதிகளவிலான பொருட்கள் தேங்கி நிற்கிறது. மேலும் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து அசுத்தம் அடைந்-துள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. வாய்க்காலில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.