/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
/
சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
ADDED : ஆக 22, 2024 01:46 AM
கரூர் ஏமூரில், கிராம மக்கள் சார்பில் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து நடக்கவிருந்த சாலை மறியில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
கரூர், தான்தோன்றிமலை ஒன்றியம் ஏமூர்-நடுப்பாளையம் செல்லும் வழியில், கரூர்-திண்டுக்கல் செல்லும் ரயில் பாதையில் குகை வழிபாதை பணிகள் நடந்தது. இந்நிலையில் ஓராண்டாக பணிகள் கிடப்பில் போட்டதால், இவ்வழியே செல்லும் பள்ளி கல்லுாரி மாணவர்கள், வி.ஏ.ஓ., அலுவலகம், பஞ்., அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பொதுமக்கள், 7 கிலோ மீட்டர் துாரம் சுற்றி போகும் சூழல் ஏற்பட்டது. மேலும், குகை வழிப்பாதையை, 10 அடி தள்ளி கிராம சாலையுடன் நேராக இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ரயில்வே நிர்வாகம், அதன் பணி ஒப்பந்ததாரரை கண்டித்து, இன்று கரூர்--திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடக்கும் என, கிராம மக்கள் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஏமூர் பஞ்., அலுவலகத்தில், ரயில்வே உதவி கோட்ட பொறியாளர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்நாயகி, சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக, ஏமூர் பஞ்., தலைவர் பால
கிருஷ்ணன் தெரிவித்தார்.