/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தென்கரை பாசன வாய்க்கால் நடை பாலம் உடைந்து சேதம்
/
தென்கரை பாசன வாய்க்கால் நடை பாலம் உடைந்து சேதம்
ADDED : செப் 06, 2024 01:41 AM
தென்கரை பாசன வாய்க்கால்
நடை பாலம் உடைந்து சேதம்
குளித்தலை, செப். 6-
குளித்தலை, தென்கரை பாசன் வாய்க்கால் வடக்கு பாலம் பகுதியில், 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதி மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று விட்டு, தென்கரை பாசன வாய்க்காலில் உள்ள சிமென்ட் நடைபாலம் வழியாக வீட்டுக்கு செல்வது வழக்கம்.
நகராட்சி பகுதியிலிருந்து பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவும், கடம்பர்கோவில் ஆற்று படுகைக்கு செல்லவும், தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லவும், சிமென்ட் நடைபாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். நடைபாலம் அபாய நிலையில் இருப்பதால், அகற்றி விட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள், நகராட்சி கவுன்சிலர், நகராட்சி ஆணையர் மற்றும் எம்.எல்.ஏ., கலெக்டர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்தனர்.
புதிய பாலம் கட்ட அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் நேற்று காலை 8:30 மணியளவில் சிமென்ட் நடைபாலம் திடீரென விழுந்து சேதம் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நடைபாலத்தை நம்பி இருந்த, 40 குடியிருப்பு மக்கள் நகர பகுதிக்கு வருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள், 500 மீட்டர் தொலைவில் உள்ள கடம்பர் கோவில் தென்கரை பாசன வாய்க்கால் பாலத்தையும், 500 மீட்டர் தொலைவிலுள்ள சினிமா தியேட்டர் பாலத்தையும் கடந்து வர வேண்டும். நகராட்சி நிர்வாகம் சேதமான பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.