/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சி திட்டங்களை சமூக வலைதளங்களில் பதிவிட ரூ.12 லட்சம் தீர்மானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த கவுன்சிலர்கள்

ADDED : ஜூலை 31, 2024 01:52 AM
கரூர்:கரூர் மாநகராட்சி திட்டங்களை, சமூக வலைதளங்களில் பதிவிட, 12 லட்சம் ரூபாய் செலவு செய்யும் டெண்டருக்கு, அனுமதி கோரி கூட்டத்தில் வைக்கப்பட்ட தீர்மானம் கவுன்சிலர்களை மிரள வைத்துள்ளது.
இன்று நடக்கும் கரூர் மாநகராட்சி கூட்டத்தில், சமூக ஊடகங்களில் பதிவிட ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் செலவிட அனுமதி கோரிய தீர்மானம் வரவுள்ளது கவுன்சிலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீர்மானம் எண், 15ல், 'கரூர் மாநகராட்சி மண்டலம் 1, 2, 3, 4 ஆகியவற்றில் உள்ள, 48 வார்டுகளில் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், ஆய்வு கூட்டங்கள், நேரடி கள ஆய்வு, மாநகராட்சி அறிவிப்புகள் ஆகியவற்றை, பேஸ் புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவிடவும், அதில் வரப்பெறும் குறைகளை கண்காணித்தல் போன்ற பணிகளை தனியார் நிறுவனங்கள் மூலம் நிர்வகிக்க, மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வீதம், ஓராண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் ஒப்பந்தப்புள்ளி கோர அனுமதி வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத கவுன்சிலர் ஒருவர் கூறுகையில், 'கரூர் மாநகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ௧௦ கோடி ரூபாய்க்கு மேல், ஒப்பந்ததாரருக்கு பாக்கி தராமல் உள்ளதால் வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ளன. மாதந்தோறும், 20 முதல், 40 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு ஆட்களை பணி அமர்த்தினால் ஆண்டுக்கு, 4 லட்சம் ரூபாய் அதிகபட்ச செலவாகும். ட்விட் போட ஆண்டுக்கு, 12 லட்சம் ரூபாய் செலவு என்பது, எதிர்க்கட்சி கவுன்சிலர்களை மட்டுமின்றி, ஆளும் கட்சி கவுன்சிலர்களையும் மிரள வைத்துள்ளது' என்றார்.