/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவக்கம்
ADDED : மார் 05, 2025 07:11 AM
கரூர்: தான்தோன்றிமலை, கல்யாணவெங்கடரமண சுவாமி கோவிலில், மாசிமக தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற, கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா, தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜையுடன் விழாவுக்கான, பூர்வாங்க பணிகள் தொடங்கியது. அப்போது, வெள்ளி கருட சேவையில், மூலவர் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். நேற்று காலை, 9:00 மணிக்கு மாசிமக தெப்பத் திருவிழாவுக்காக கொடியேற்ற விழா கோவிலில் நடந்தது.
அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். வரும், 10ல் திருக்கல்யாண உற்சவம், 12ல் தேர்த் திருவிழா, 14ல் தெப்ப உற்சவம், 15, 17ல் வெள்ளி கருடசேவை, 19ல் ஆளும் பல்லாக்கு, 20ல் ஊஞ்சல் உற்சவம், 21ல் புஷ்பயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.