/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
முள் செடிகள் வளர்ச்சி கிராம மக்கள் அவதி
/
முள் செடிகள் வளர்ச்சி கிராம மக்கள் அவதி
ADDED : ஜூலை 21, 2024 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்;கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்தில், வல்லம் கிராம சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக பலர் சென்று வருகின்றனர். சாலை இருபுறமும், அதிகமான முள் செடிகள் வளர்ந்து வருகிறது. இதனால் சாலை வழியாக, மக்கள் வாகனங்களில் செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. மேலும், சாலை வழியாக மக்கள் நடந்து செல்லும் போது முள் செடிகள் மக்கள் மீது படுகிறது. இதனால் உடலில் சிறு காயங்கள் ஏற்படுகிறது. எனவே, சாலை இருபுறமும் வளர்ந்து வரும் முள் செடிகளை வெட்டி அகற்ற, பஞ்., நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.