ADDED : ஏப் 10, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க.பரமத்தி;கரூர்-ஈரோடு சாலை குந்தாணிப்பாளையத்தில், நெடுஞ்சாலை துறை சார்பில், கிராம ஊர் பெயர்கள் அடங்கிய, பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளுக்கு, பெயர் பலகையில் இருந்த, ஊர்ப்பெயரின் தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. தற்போது, பலகை சாய்ந்த நிலையில், எந்தநேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. ஊர் பெயர்களின் எழுத்துகளும் அழிந்து வருகிறது. புதிதாக ஊருக்கு செல்பவர்கள், வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே, புதிதாக ஊர் பெயர்களை எழுதி, போர்டையும் மாற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

