/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடங்கிய மழை நொய்யல் ஆறு, வாய்க்காலில் தண்ணீர் வரத்து

ADDED : செப் 28, 2024 03:57 AM
கரூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய தொ டங்கியுள்ளதால், நொய்யல் ஆறு மற்றும் வாய்க்காலில் தண்ணீர் வர துவங்கியுள்-ளது.
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலைச் சாரலில் பெய்யும் மழையால், உருவாகும் நொய்யல் ஆறு, திருப்பூர், கரூர் மாவட்-டங்களில் ஓடி காவிரியாற்றில் கலக்கிறது.இந்நிலையில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் கடந்த சில நாட்க-ளாக மழை பெய்து வருவதால், நொய்யல் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்ல தொடங்கியுள்ளது.
மேலும், கரூர்-ஈரோடு சாலை நொய்யல் ஆற்றில் இருந்து பிரியும், வாய்க்காலிலும் நேற்று வினாடிக்கு, 70 கன அடி தண்ணீர் சென்றது. அதன் மூலம், 8,500 ஏக்கர் நிலம் பாசன வச-தியை பெறுகிறது.
இம்மாத இறுதியில்,
வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்யும் போது, நொய்யல் ஆறு மற்றும் வாய்க்காலில் அதிகப்படியான தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.