/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
/
அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து குறைவு
ADDED : செப் 09, 2024 07:32 AM
கரூர்: கேரளா மாநிலம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்து வருவதால், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு படிப்படியாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 272 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு தண்ணீர் வரத்து, 197 கன அடியாக குறைந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 138 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை நீர்மட்டம், 89 அடியாகஇருந்தது.
மாயனுார் கதவணைகரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 17,937 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு, 17,744 கன அடியாக குறைந்ததது. தென்கரை பாசன வாய்க்காலில், கீழ் கட்டளை வாய்க்கால் உள்ளிட்ட, நான்கு வாய்க்கால்களில் வினாடிக்கு, 1,420 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.19 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.