/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆடிப்பட்டத்தில் விதைப்பு இல்லை தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
/
ஆடிப்பட்டத்தில் விதைப்பு இல்லை தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ஆடிப்பட்டத்தில் விதைப்பு இல்லை தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ஆடிப்பட்டத்தில் விதைப்பு இல்லை தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ADDED : ஆக 05, 2024 02:24 AM
கரூர்,
க.பரமத்தி யூனியனில், ஆடிப்பட்டத்தில் மானாவாரி விதைப்பு சாகுபடி நடக்கும். ஜூன், ஜூலையில் கிடைக்கும் மழை, தொடர்ச்சியாக ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் மழையை நம்பி, ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் சோளம், கம்பு உள்ளிட்ட தானிய பயிர்களும் எள், நிலக்கடலை, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துகளும் பயிரிடப்படும்.
இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை இடைவெளி விட்டு அவ்வப்போது சாரல் மழையாக மட்டுமே பெய்தது. தொடர்ந்து மழை பெய்யாமல் ஏமாற்றியதால் விவசாயிகள் ஆடிப்பட்ட விதைப்பில் மானாவாரி விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த சீசனில் நடக்கும் சாகுபடி அறுவடையின் போது கால்நடைகளுக்கு தேவையான கட்டை தீவனங்கள் கிடைக்கும். சோளம், மக்காச்சோளத்தின் தட்டைகளும், நிலக்கடலை செடியும் பதப்படுத்தப்பட்டு கால்நடைகளுக்கு கட்டை தீவனமாக சேமித்து வைக்கப்படும். பச்சை தீவனத்துடன் கட்டை தீவனமும் கலந்து கொடுத்து விவசாயிகள் கால்நடைகளை பராமரிப்பர். குறிப்பிட்ட இடங்கள் தவிர்த்து மற்ற பகுதியில் மானாவாரி பயிரிடப்படாததால் வரும் காலங்களில் தீவன தட்டுபாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.