/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இன்று ஆடிப்பெருக்கு பூக்கள் விலை உயர்வு
/
இன்று ஆடிப்பெருக்கு பூக்கள் விலை உயர்வு
ADDED : ஆக 02, 2024 11:26 PM
கரூர்:தமிழகம் முழுதும் இன்று, ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இதனால், நீர் நிலைகளில் பொதுமக்கள், புனித நீராடி கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதையடுத்து, கரூர் பூ மார்கெட்டில் பூக்கள் விலை சற்று உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ மல்லிக்கை பூ, 600 ரூபாய் வரை விற்றது. நேற்று, 800 ரூபாய் விலை போனது. அதேபோல், முல்லை பூ, 300 ரூபாயில் இருந்து, 450 ரூபாய்க்கும், அரளி பூ, 200 ரூபாயில் இருந்து, 250 ரூபாய்க்கும், ரோஜா, 200 ரூபாயில் இருந்து, 300 ரூபாய்க்கும், சம்பங்கி, 200 ரூபாயில் இருந்து, 250 ரூபாய்க்கும் விற்பனையாயின.
நான்கு கட்டு துளசி 50 ரூபாயில் இருந்து 60 ரூபாய்க்கும், ஒரு கட்டு மரிக்கொழுந்து 50 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கும் விற்பனையானது.