/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்பனா சாவ்லா விருதுக்கு நாளை கடைசி நாள்
/
கல்பனா சாவ்லா விருதுக்கு நாளை கடைசி நாள்
ADDED : ஜூலை 19, 2024 01:52 AM
கரூர்: கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாளாகும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட வருகிறது. இதில், விரு-தாளருக்கு விருதுக்கான பதக்கத்துடன், 5 லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். https://www.awards.tn.gov.in/-என்ற இணையதளம் வழியாக விண்-ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்-கொள்ளப்படமாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படி-வத்துடன் துணிச்சலான மற்றும் வீரசாகச செயல் புரிந்தமை குறித்த புகைப்படங்கள் மற்றும் பத்திரிக்கை செய்தி குறிப்புக-ளுடன் கூடிய ஆவணங்களை ஜூலை 22 மாலை, 5:00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், கரூர் கலெக்டர் அலு-வலகம் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.