/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
/
புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
புதிய பாரதம் எழுத்தறிவு திட்டம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி
ADDED : ஆக 02, 2024 01:30 AM
கரூர்,
க.பரமத்தி வட்டார வள மையத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் அறிவழகன் தலைமை வகித்தார். க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட, 64 மையங்களில் இருந்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் பாலகிருஷ்ணன், மகேஸ்வரன், நிவேதா, முரசொலி, ரேவதி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
தமிழில் ஒலி வடிவம், வரி வடிவம், எளிய எழுத்துக்கள் மற்றும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய எளிய வகை சொற்கள் குறித்து விளக்கி கூறியதுடன், எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன் குறித்து பற்றி எடுத்துரைத்தனர்.
பெண்கள் மற்றும் முதியோர்களுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள், சுயதொழில் தொடங்குதல், ஆரோக்கியம் மற்றும் எளிய முறையில் உடற்பயிற்சி பற்றி ஆசிரியர் பயிற்றுனர்கள் பயிற்சி அளித்தனர். பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு, கற்போர்களுக்கான புத்தகம் வழங்கப்பட்டது.