/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எண்ணெய் வித்துகள் குறித்து பயிற்சி
/
எண்ணெய் வித்துகள் குறித்து பயிற்சி
ADDED : ஆக 06, 2024 02:27 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம், புனவாசிப்பட்டி கிராமத்தில் எண்ணெய் வித்துகள் பதப்படுத்துதல் மற்றும் அதன் பயன்கள், அறுவடைக்கு பின் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பின் கீழ் விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் அரவிந்தன் தலைமை வகித்தார். கரூர் மாவட்ட உழவர் பயிற்சி வேளாண்மை அலுவலர் ஜெயபாரதி, ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றியும், மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார். இயற்கை முறையில் விவசாயம் செய்வதன் அவசியம், நன்மைகள் பற்றியும் விளக்கப்பட்டது. உழவர் சந்தை பயன்கள், அதில் உறுப்பினராகும் முறைகள், மானிய விலையில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலை தொடங்கும் முறைகள் பற்றியும் எடுத்து கூறப்பட்டது.
உதவி தோட்டக்கலை அலுவலர் சிவசந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் நித்யா, கிருஷ்ணராய புரம் வட்டார தொழில் நுட்ப மேலாளர் முரளி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.