/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்பனை
/
கரூர் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்பனை
கரூர் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்பனை
கரூர் பஸ் ஸ்டாண்டில் சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் விற்பனை
ADDED : செப் 12, 2024 07:47 AM
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்டில், சுகாதாரமற்ற முறையில், உணவு பண்டங்கள் விற்பனை செய்-யப்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்-வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஏ' கிரேடு அந்தஸ்து பெற்ற கரூர் பஸ் ஸ்டாண்டில், மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. அதில், சில கடைகளில் ஏற்க-னவே சுகாதாரமற்ற முறையில் டீ, காபி, எண்ணெய் பலகாரங்கள் மற்றும் உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்வதாக புகார் உள்ளது.இந்நிலையில், கரூர் பஸ் ஸ்டாண்டில், 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தர்ப்பூசணி, வெள்ள-ரிக்காய் உள்ளிட்ட பழ வகைளை வெட்டி, பஸ்சில் ஏறி விற்பனை செய்கின்றனர். அதில், சிலர் பழங்களை கழிப்பிடம் அருகேயுள்ள பகுதி, பயணிகள் சிறுநீர் கழித்த இடங்களில் வைத்து வெட்டி, கவரில் போட்டு விற்பனை செய்கின்-றனர். அதை வாங்கி சாப்பிடும் பயணிகளுக்கு, வயிற்று உபாதை உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரமற்ற முறையில், உணவு பண்டங்களை விற்பனை செய்பவர்கள் மீது, உணவு பாதுகாப்பு துறை, மாந-கராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்-டியது அவசியம்.