/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுார் கதவணையில் நீர்வரத்து குறைவு
/
மாயனுார் கதவணையில் நீர்வரத்து குறைவு
ADDED : ஆக 04, 2024 03:09 AM
கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, ஒரு லட்சத்து, 67 ஆயிரத்து, 156 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று மதியம், 2:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, ஒரு லட்சத்து, 10,000 கன அடியாக, தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 9,080 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 920 கனஅடி தண்ணீரும் திறக்கப்-பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்ததால், கரூர் மாவட்ட எல்லையான, தவிட்டுப்பாளையம் காவிரியாற்று பகுதி-களுக்கு வெள்ள அபாயம் நீங்கியது
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,512 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினா-டிக்கு, 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பாசன வாய்க்-கால்களில், 455 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட, அணை நீர்மட்டம், 88.75 அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினா-டிக்கு, 1,157 கன அடி தண்ணீர் வந்தது.
நங்காஞ்சி அணை
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நேற்று காலை, நிலவ-ரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணை நீர்மட்டம், 21.13 அடியாக இருந்தது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி, ஆத்துப்பா-ளையம் அணைக்கு நீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 23.55 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து, 255 கன அடியாக உள்ளது. பாசனத்திற்கு நீர் திறக்கவில்லை.