/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'அரவக்குறிச்சியில் பஸ் ஸ்டாப் வேண்டும்'
/
'அரவக்குறிச்சியில் பஸ் ஸ்டாப் வேண்டும்'
ADDED : ஜூலை 01, 2024 03:44 AM
அரவக்குறிச்சி: கரூர் - திண்டுக்கல் புறவழிச்சாலை, அரவக்குறிச்சி பகுதியில் பஸ் ஸ்டாப் ஏற்படுத்தி தர வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சியில் வசிக்கும் பொதுமக்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர், கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட பணிகளுக்காக, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர். அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளுக்கு அரசு பஸ்களின் சேவை, காலை, 5:00 முதல் இரவு, 10:00 மணி வரை என்ற அளவில் முடிந்து விடுகிறது.
அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி பகுதிகளில் இருந்து கரூர், திண்டுக்கல் செல்ல வேண்டுமென்றால் ஒன்றரை மணி நேரம் முதல், 2 மணி நேரம் வரை ஆகிறது. இரவு நேரங்களில் பஸ் வசதியின்றி மிகவும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால், அரவக்குறிச்சி புறவழிச்சாலையில் பஸ் ஸ்டாப் ஏற்படுத்தினால், அரை மணி நேரத்தில் சென்று விட முடியும். பகல், இரவு என, எந்த நேரமும் பயணிக்க வாய்ப்பு ஏற்படும். எனவே பொதுமக்கள் நலன் கருதி, கரூர் - திண்டுக்கல் புறவழிச்சாலையில் அரவக்குறிச்சி பகுதியில் பஸ் ஸ்டாப் ஏற்படுத்தி தரவேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.