/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்
/
குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்
ADDED : ஜூன் 27, 2024 04:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, இரண்டு பெண் குழந்தைகளுடன் மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார்
செய்துள்ளார்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன், 33; இவருக்கு காயத்திரி, 23; என்ற மனைவியும், தேவஸ்ரீ, 4; ஹர்சிகா, 2; என இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த, 24ல் வீட்டில் இருந்து, பெண் குழந்தைகளுடன் வெளியே சென்ற, காயத்திரி வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் காயத்திரி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த திருக்குமரன் போலீசில் புகார்
செய்தார்.
வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.