/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மேய்ச்சல் நிலமாக மாறும் விவசாய நிலங்கள் நடப்பு ஆண்டில் மேட்டூர் கை கொடுக்குமா?
/
மேய்ச்சல் நிலமாக மாறும் விவசாய நிலங்கள் நடப்பு ஆண்டில் மேட்டூர் கை கொடுக்குமா?
மேய்ச்சல் நிலமாக மாறும் விவசாய நிலங்கள் நடப்பு ஆண்டில் மேட்டூர் கை கொடுக்குமா?
மேய்ச்சல் நிலமாக மாறும் விவசாய நிலங்கள் நடப்பு ஆண்டில் மேட்டூர் கை கொடுக்குமா?
ADDED : ஜூலை 19, 2024 01:53 AM
கரூர்: கடந்த ஆண்டு காவிரி ஆற்றில் நீர் வரத்து இல்லாததால், மேய்ச்சல் நிலமாக விவசாயம் மாறியுள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை கை கொடுக்குமா என, விவசாயிகள் காத்தி-ருக்கின்றனர்.
மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு ஆண்டு தோறும் ஜூன், 12-ம் தேதி தண்ணீர் திறக்-கப்படுவது வழக்கம். ஆனால், தென்மேற்கு பருவ மழையை காரணம் காட்டி, தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை கர்நா-டகா திறக்கவில்லை. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து, 51 அடியாக உள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி தொடங்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்-றனர்.
இது குறித்து, வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: கரூர் மாவட்-டத்தில் ஆண்டுதோறும், 13,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடக்கும். காவிரி ஆற்று நீரை மட்டுமே நம்பி சாகுபடி நடப்-பதால், 90 சதவீதம் சம்பா பருவ காலங்களில் நெல் பயிரிடப்படு-கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக இயல்பான பரப்பை விட, 2019--20ல் 13,910 ஹெக்டேர், 2020--21ல், 15,902 ஹெக்டேர், 2021--22ல், 14,966 ஹெக்டேர், 2022--23ல், 13,959 ஹெக்டேர் என கூடுதலாக சம்பா சாகுபடி நடந்தது. கடந்த ஆண்டு ஜூன், 12ல் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்ட போதும், பாதியில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால், 2023-24ல், 8,000 ஹெக்டேர் மட்டுமே சம்பா சாகுபடி நடந்தது. நடப்பு ஆண்டில் தண்ணீர் இல்லாததால், ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கவில்லை.
ஒரு போக விளைச்சல் கொண்ட இந்த மாவட்ட விவசாயிகள், ஆடி 18 அன்று விதை நாற்றங்கால் விடும் பணியை தொடக்-குவர். இதற்காக ஆடி பிறந்ததும், நிலத்தை உழும் பணியை தொடங்குவர். தற்போது மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், சாகுபடி தொடங்க ஆர்வம் காட்டாததால் மேய்ச்சல் நிலமாக மாறி வருகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்பி-டிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23,989 கன அடியாக அதிகரித்-திருப்பதுடன், நீர்மட்டமும், 51 அடியை எட்டியுள்ளது. அணை நிரம்பி போதிய அளவில் தண்ணீர் திறந்தால் மட்டுமே சம்பா சாகுபடி தொடங்கும்.