/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
/
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : செப் 04, 2024 03:08 AM
கரூர்;மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் உள்பட இரண்டு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, கரூர் மாவட்ட நீதிபதி சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்புக்கு, துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர், உதவி சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் ஆகிய பணியிடங்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி, தேர்வுமுறை, விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி குறித்த தகவல்கள், https://districts.ecourts.gov.in/karur என்ற, கரூர் மாவட்ட நீதிமன்ற இணைய தளத்தில் உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.